வியாழன், 24 பிப்ரவரி, 2011

ஹா ..ஹா ..ஹா ..ஹா ..ஹா ..ஹா ..


"தலைவரே அடிக்கடி நிதி கேட்க வேண்டாம்னு சொன்னேன் கேட்டீங்களா .."
                                                  
                                                       "ஏன் என்னாச்சு "


"உங்களுக்கு தேர்தல்ல திருவோடு சின்னம் கொடுத்திருக்காங்க .."



செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

ஹா ..ஹா ..ஹா ..


" நடிகையை கட்சில சேர்த்தது தப்பா போச்சு "
                                     " ஏன் !"
"கட்சி கூட்டத்தில்  பேசுறதுக்கு டப்பிங் ஆர்டிஸ்டையும் கூட்டிட்டு வந்திருக்காங்க "



திங்கள், 21 பிப்ரவரி, 2011

காதல் ஓலை


"மன்னர் ஏன் ஷோகமாயிருக்காரு"

"மகராணிக்கு யாரோ காதல் ஓலை அனுப்பியிருக்காங்கலாம் " 

சனி, 19 பிப்ரவரி, 2011

வெங்காயம்

"தலைவரே போச்சு  நம்ம கட்சி தேர்தலில் தோற்றுவிடுவோம் "

                                                   "ஏன் "

"நம்ம கட்சிக்கு வெங்காயம் சின்னம்ல கொடுத்திருக்காங்க அதான் "

சோகம்


"அவர் ஏன் சோகமாயிருக்கார்  "

"அவரு படம் திருட்டு வி.சி.டி யிலேயே  பெயிலியர் ஆயிடுச்சாம் அதான் "

வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

சிரிப்பு

"தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது தப்பா போச்சு "

                                      "ஏன் "

"தொண்டர்களிடம் கன்சல்டிங் பீஸ் கேட்கிறார் "
 

வியாழன், 17 பிப்ரவரி, 2011

சிரியுங்கள்

"அவரு போலி டாக்டரா எப்படி சொல்றே "
"பல்லு கட்டணும்னு சொன்ன எத்தனை கிரவுண்டுலேன்னு கேட்கிறார் "


சிரியுங்கள்

"அவர் போலி சாமியாரா எப்படி சொல்றே.. "

"அவர் ஆஷ்ரமத்தில்  பெண்களே கிடையாதாம் "